உறவுக்கார பெண்ணுடன் இருந்த தவறான உறவு.. மனைவியை கொன்ற கணவனுக்கு அதிகபட்ச தண்டனை அளித்த நீதிமன்றம்!

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தில் தவறான உறவுக்கு இடையூறாக இருந்ததால் மனைவியை கொலை செய்த தீயணைப்பு வீரருக்கு, மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் உக்கிரன்கோட்டையைச் சேர்ந்தவர் செந்தில்குமார். சென்னையில் தீயணைப்புப்படை வீரராக பணியாற்றி வந்த இவர், தனது மனைவி சரண்யா, மகள் ஷிவானியுடன் கொண்டித்தோப்பில் உள்ள தீயணைப்புத்துறை குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்நிலையில் தனது உறவுக்கார பெண்ணுடன் தவறான உறவில் இருந்துள்ளார் செந்தில்குமார். இதனை அறிந்த அவரது மனைவி சரண்யா எதிர்ப்பு தெரிவித்து அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இந்த தகராறு முற்றிய நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் திகதி தனது மனைவியை தலையணையால் அமுக்கி செந்தில்குமார் கொலை செய்தார்.

இதுதொடர்பாக ஏழுகிணறு பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், செந்தில்குமார் மீதான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, நீதிமன்றம் அவருக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers