சாலையில் இருந்த மண்ணை தோண்டிய நபர்கள்! உள்ளே புதைக்கப்பட்டிருந்தது என்ன? அதிர்ந்து போன தருணம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் பிறந்த சில மணிநேரங்களே ஆன பெண் குழந்தையை மண்ணில் உயிரோடு புதைத்து சென்ற கொடூர தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் அருகில் உள்ள டீக்கடை கடந்த சில மாதங்களாக பூட்டிய நிலையில் உள்ளது.

இந்த கடையில் கடந்த சில நாட்களாக மராமத்து பணிகள் நடந்து வருகின்றன.

இதற்காக செங்கல், மணல் உள்ளிட்ட தளவாட பொருட்கள் கடைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ளன. இன்று காலையில் பணிக்கு வந்த தொழிலாளர்கள் அங்கிருந்த மணலை அள்ளினர்.

அப்போது மணலுக்குள் பிறந்த சில மணிநேரங்களே ஆன பெண் சிசு புதைத்து வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

தொப்புள் கொடி அகற்றப்படாமல் அந்த குழந்தை இருந்த நிலையில் பொலிசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கமெராவை ஆய்வு செய்து வரும் நிலையில் அந்த குழந்தையை மண்ணில் புதைத்து சென்றது யார் என்று விசாரித்து வருகின்றனர்.

தவறான வழியில் பிறந்த குழந்தையை அதன் தாய் புதைக்க இடம் தெரியாமல் அங்கிருந்த மணலில் புதைத்து சென்றிருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.

மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் இடத்தில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்