3-வது மனைவியை தேடிய கணவரை நடுரோட்டில் அடித்து உதைத்த 2 மனைவிகள்: வெளியான புகைப்படம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் மூன்றாவது மனைவியை தேடிச் சென்ற கணவரை இரண்டு மனைவிகள் ரோட்டில் அடித்து உதைத்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கோயபுத்தூர் சூலூர் அருகே உள்ள நேரு நகரை சேர்ந்தவர் சவுந்தர்ராஜ். இவருக்கு அரங்க அரவிந்த தினேஷ் ( 26) என்ற மகன் உள்ளார்.

அரங்க அரவிந்த தினேஷ் ராசிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இவருக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு திருப்பூர் கணபதி பாளையத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவரது மகள் பிரியதர்ஷினி என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

திருமணமான 15 நாட்களிலேயே அரவிந்த் ,பிரியதர்ஷினியை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் கொடுமை தாங்கமுடியாத அவர் தனது மாமனார், மாமியாரிடம் கூறிய போது, அவர்கள் இதை கண்டுகொள்ளாததால், பிரியதர்ஷினி இது குறித்து பேரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பின் அவர், திருப்பூரில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட அரவிந்த தினேஷ், தனக்கு முதல் திருமணம் ஆனதை மறைத்து, திருமணம் வலைத்தளம் மூலம் மீண்டும் தனக்கு பெண் தேடியுள்ளார்.

அப்போது திருமண தகவல் மையம் மூலமாக கரூர் மாவட்டம் பசுபதி பாளையத்தை சேர்ந்த அய்யப்பன் என்பவரது மகள் அனுப்பிரியா (23) என்ற பெண்ணை கடந்த ஏப்ரல் 10-ஆம் திகதி 2-வது திருமணம் செய்து கொண்டார்.

அனுப்பிரியாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. அரங்க அரவிந்த் அனுப்பிரியாவை ஒண்டிப்புதூரில் வீடு வாடகைக்கு எடுத்து கொடுத்து வசித்து வந்தார்.

சில மாதங்கள் கடந்ததும் அரங்க அரவிந்த் முதல் மனைவியை கொடுமை படுத்தியது போல அனுப்பிரியாவையும் கொடுமைபடுத்தியுள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த அனுப்பிரியா தனது கணவரை பிரிந்து கரூரில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இரண்டு மனைவியும் பிரிந்து சென்றுவிட்டதால், வழக்கம் போல் அரவிந்த் மூன்றாம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

3-வது திருமணத்திற்கும், திருமண வலைத்தளம் மூலம் தனக்கு மணப்பெண் தேடியுள்ளார். இதை தெரிந்து கொண்ட 2 மனைவிகளின் குடும்பத்தினர் அரவிந்திடம் நேரில் சென்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் நான் அப்படித்தான் செய்வேன்.

உங்களால் முடிந்ததை பார்த்து கொள்ளுங்கள் என்று கூற, அவரை தாக்கியுள்ளனர்.

அதன் பின் முதல் மனைவி பிரியதர்ஷினி 2-வது மனைவி அனுப்பிரியா ஆகியோர் அரவிந்த் வேலை பார்த்து வரும் தொழிற்சாலைக்கு சென்று அவரை வெளியே அனுப்பும்படி கூறினர்.

ஆனால் கம்பெனி நிர்வாகம் அவரை வெளியே அனுப்ப மறுத்ததால், 2 மனைவிகளும் கம்பெனி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு விரைந்து வந்த பொலிசார், இரண்டு பேரையும் காவல்நிலையத்திற்கு வரும் படி கூறியுள்ளனர்.

அங்கு சென்ற அவர்கள், அரங்க அரவிந்த் மீது தங்களை ஏமாற்றி திருமணம் செய்து விட்டு, 3-வதாக திருமணம் செய்ய முயன்றதால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர். புகாரின் பேரில் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...