நடிகர் ராகவா லாரன்ஸ் பெயரை பயன்படுத்தி நடந்த திடுக்கிடும் மோசடி! அடுத்தடுத்து வெளியான தகவல்

Report Print Raju Raju in இந்தியா

நடிகர் ராகவா லாரன்ஸின் தொண்டு நிறுவனத்தின் துணை தலைவர் என கூறி பெண்ணிடம் ரூ 18 லட்சம் வரை மோசடி செய்த நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரத்தை சேர்ந்த அல் அமீன் - பத்தூன் நிஷா தம்பதியின் மகள் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்ணின் தேர்ச்சி பெற்றார்.

சில மாதங்களுக்கு முன்னர் நிஷா தனது மகள் குறித்து தெரிந்த நபரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, வேலூரை சேர்ந்த பிரவீன் குமார் என்பவர் அங்கு வந்துள்ளார்.

நிஷாவிடம் அவரது மகள் குறித்து பேச்சுக்கொடுத்த அவர், தான் நடிகர் ராகவா லாரன்ஸ் நடத்தும் டிரஸ்டின் துணை தலைவர் என்று அறிமுகம் செய்துள்ளார்.

மேலும் தங்களது டிரஸ்ட் மூலம், வேலூர் CMC மருத்துவக் கல்லூரியில் பத்தூன் நிஷாவின் மகளுக்கு குறைந்த செலவில் சீட் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தைக் கூறியுள்ளார்.

இதனை நம்பிய நிஷா, முதல் தவணையாக பிரவீன் குமார் கேட்டதற்கு இணங்க நான்கரை லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார்.

அதன் பின்னர் மொத்தமாக சுமார் 18 லட்சம் ரூபாய் வரை பிரவீன்குமாரிடம் கொடுத்தார்.

அதன்பின் இறுதியாக செப்டம்பர் 7ம் திகதி மருத்துவ சீட்டுக்கான கவுன்சிலிங் நாள் என கூறிய அவர் அது தொடர்பான தகவலை கூறினார்.

இதனை நம்பி இருந்த அவர், கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி ஏதோ சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள பிரவீன் குமாரை தொடர்பு கொண்டுள்ளார்.

ஆனால் அவர் பல முறை அழைத்தும் செல்போனை எடுக்காததால் லாரன்ஸ் நடத்தும் டிரஸ்டை தொடர்பு கொண்டார்.

அபோது, அதுபோல் ஒரு நபர் அங்கு பணியாற்றவில்லை என தெரிந்தது.

இது குறித்து பொலிசில் அவர் கொடுத்த புகாரின் பேரில் தலைமறைவான பிரவீன் குமாரை பொலிசார் தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers