இறுதிச்சடங்கின் போது மாமியாருக்காக மருமகள்கள் செய்த செயல்... நெகிழ்ச்சி சம்பவம்!

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் மாமியாரின் இறுதிச்சடங்கின் போது, மருமகன் அவரின் உடலை மருமகள்கள் தூக்கிச் சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர் சுந்தர்பாய் நைக்வாடே. 83 வயதான இவருக்கு நான்கு மகன்கள் உள்ளனர். நான்கு மகன்களுக்கும் திருமணம் ஆகிவிட்டதால், வீட்டிற்கு வந்த மருமகள்களை அவர் தன்னுடைய மகள்கள் போன்று பார்த்து வந்துள்ளார்.

மகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருந்த இவர், உடல்நலக் குறைவால் காலமானார். அவர் கண்தானம் செய்திருந்த நிலையில், இறந்தவுடன் அவரது ஆசைப்படியே அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன.

தங்களை நன்றாகக் கவனித்துக்கொண்ட மாமியாருக்கு எதாவது செய்ய வேண்டும் என்று மருமகள்கள், இறந்த மாமியாரின் உடலை சுடுகாடு வரை சுமந்து சென்றனர். இந்த நிகழ்வு அங்குள்ள மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் மாமியார்- மருமகள் எலியும், பூனையுமாக இருக்கும் சூழ்நிலையில், இம்மாதிரியான ஒரு சம்பவம் நடந்துள்ளது பலராலும் ஆச்சரியமாகவும் பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers