நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம்... இளைஞன் எடுத்த விபரீத முடிவின் அதிர்ச்சி வீடியோ

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நடந்ததால், அவர் தற்கொலைக்கு முயன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் பலான்புர் பகுதியை சேர்ந்தவர் ராகுல் வால்மீகி (21). இவருக்கு அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அந்த பெண்ணோ ராகுலை பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். இதனால் பெண் வீட்டார் வேறு ஒருவருக்கும் பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதனால் மிகுந்த மன வருத்ததில் இருந்த ராகுல், தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்துள்ளார். இதனால் அங்கிருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பின் மேல் ஏறி குதிப்பதற்கு தயாராகியுள்ளார்.

இந்த தகவல் எப்படியோ அங்கிருக்கும் மக்களுக்கு தெரியவர, உடனடியாக ஒரு பெரிய துணி ஒன்றை எடுத்து கீழே பிடித்துள்ளனர். இந்த தகவலும் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் குறித்த பகுதிக்கு விரைந்துள்ளனர்.

அவர்கள் ராகுலிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே, திடீரென்று மேல் இருந்து குதித்தார். கீழே பொலிசார் மற்றும் மக்கள் போர்வை போன்ற துணியை பிடித்திருந்ததால், அவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்