வெளிநாட்டுக்கு செல்ல துடிக்கும் பாலியல் வழக்கில் சிக்கிய சாமியார் நித்தியானந்தா! ஆனால் அவருக்கு நேர்ந்த கதி

Report Print Raju Raju in இந்தியா

தன்னுடைய பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதால் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் நித்தியானந்தா தன்னை வேண்டுமென்றே சில ஊடகங்கள் உசுப்பேத்துவதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

சாமியார் நித்தியானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்த வீடியோ முன்னர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் பின்னர் மதுரை ஆதின மடத்தின் இளைய ஆதினமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவர் மீதி பாலியல் வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் நித்தியானந்தாவின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதால் அவரால் வெளிநாட்டுக்கு செல்ல முடியவில்லை, இதன் காரணமாக அவர் கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள ஆசிரமத்திலேயே முடங்கி கிடக்கிறார்.

இது குறித்து தனது பக்தர்கள் முன்னால் அவர் புலம்பியுள்ளார்.

அவர் பேசுகையில், பாஸ்போர்ட் எனக்கு கிடையாது என சொன்னவுடன் என்னை உசுப்பேத்தவே சில ஊடகங்கள் உள்ளது. இப்படி உசுப்பேத்தியே என்னை ரணகளமாக்கி விட்டார்கள்.

என்னை புயல் என காட்ட முயன்றாலும் சரி அல்லது வைகை புயல் என நகைச்சுவையாக காட்டினாலும் சரி, எனக்கு அதெல்லாம் தெரியாது, எனக்கு தெரிந்தது மீனாட்சி மட்டும் தான் என்று பேசினார்.

அதே போல காலில் செருப்பு அணியாமல் நடந்தால் மட்டுமே பூமாதேவியின் மூலம் நேரடியாக பல சக்திகள் உடலுக்கு கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்