பள்ளிக்கு செல்வதாக தாயாரிடம் கூறிவிட்டு கிளம்பிய 25 வயது ஆசிரியை! பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவத்தின் புகைப்படம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் பேருந்து நிலையத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட ஆசிரியையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் சேகர் (55). இவருடைய மனைவி லதா (48). இவர்களுக்கு அருண்குமார் (27) என்ற மகனும், பிரியா (25) என்ற மகளும் இருந்தனர்.

இதில் பிரியா தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார்.

இவர்களுடைய உறவினரின் திருமண விழா கோவையில் நாளை நடக்கவுள்ள நிலையில் அங்கு குடும்பத்தினருடன் செல்வதற்கு சேகர் திட்டமிட்டார்.

இந்த நிலையில் நேற்று காலையில் பிரியா தன்னுடைய தாயாரிடம், பள்ளிக்கூடத்துக்கு சென்று விடுப்பு எடுத்து விட்டு வருவதாக கூறிச் சென்றார்.

பின்னர் அவர் பள்ளிக்கூடத்துக்கு செல்லாமல், மதியம் 1 மணியளவில் பேருந்து நிலையத்துக்கு வந்து விஷம் குடித்தார்.

இதனால் அங்கு பயணிகள் அமரும் இருக்கையிலேயே வாந்தி எடுத்து மயங்கி விழுந்த பிரியா சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து, பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, பிரியா தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்