ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் விஷம் வைத்துவிட்டு ஓட்டம் பிடித்த மகள்!

Report Print Vijay Amburore in இந்தியா

ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் விஷம் வைத்துவிட்டு காதலனுடன் ஓட்டம்பிடித்த மகளை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நான்ஹே சிங் என்பவர் உறவினர் ஒருவரின் வீட்டில் நடந்த இறுதிச்சடங்கு நிகழ்விற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது வீட்டில் இருந்த அனைவரும் உடல்நல குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அனைவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவர்கள் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது.

நான்ஹே சிங் உடனடியாக இதுகுறித்து பொலிஸ் நிலையத்தில் புகார்கொடுத்துள்ளார். அந்த புகாரில், தன்னுடைய மகள் அரவிந்த் என்கிற இளைஞரை ஒருவருடமாக காதலித்து வந்ததாகவும், தற்போது வீட்டில் உள்ள அனைவருக்கும் விஷம் வைத்துவிட்டு அவனுடன் ஓட்டம் பிடித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரவிந்த் விஷம் வாங்கிக்கொடுத்து என்னுடைய மகளை உணவில் கலக்க கூறியிருக்கலாம் என குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக இதேபோல கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஷப்னம் என்கிற இளம்பெண் தன்னுடைய வீட்டில் உள்ள 10 பேரின் கழுத்தையும் அறுத்துக்கொலை செய்துவிட்டு, காதலனுடன் ஓட்டம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers