அவருக்கு நான் அழைப்பிதழ் கொடுக்க வேண்டும்.. அவரை காணவில்லை... நீதிமன்றத்தை நாடிய வைக்கோ! 

Report Print Abisha in இந்தியா

அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழாவிற்கு பரூக் அப்துல்லா அவர்களுக்கு அழைப்பிதழ் வழங்க வேண்டும் என்றும் அவரை காணவில்லை என்றும் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் வைகோ.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் சட்டத்தை ரத்து செய்தும் மத்திய அரசு அறிவித்தது. இதனால் காஷ்மீரில் அசம்பாவித சம்வங்கள் நடக்காமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவம் குவிக்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அனைவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.இன்றளவும் இயல்பு நிலை திரும்பாத நிலையில், சில பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரும்படி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உச்ச நீதிமன்றத்தில் இன்று ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.அவர் தனது மனுவில், “சென்னையில் வரும் 15ம் திகதி நடைபெற உள்ள அண்ணா மாநாட்டுக்காக பரூக் அப்துல்லாவுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. எனவே, அவரை கண்டுபிடித்து தரவேண்டும்’ என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்