திருமணத்தன்று மணமகனால் பரிதாபமாக போன உயிர்... கவலையில் உறவினர்கள்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் திருமணத்தன்று மணமகன் அதிவேகமாக காரை ஓட்டி வந்து ஒருவர் மீது மோதி, அவர் பலியானதால், அவரது திருமணம் நிறுத்தப்பட்ட சம்பவம் உறவினர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலமடை பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவருக்கு ஜெகந்நாத் என்ற 24 வயது மகன் உள்ளார். ஜெயந்நாத், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் ஜெகந்நாதனுக்கு மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா ஒன்றில் இன்று திருமணம் நடைபெறவிருந்தது.

இதனால் அவர் தன் நண்பர்களுடன் Ford காரில் வந்துள்ளார். கார் ஓட்டி பழகிய சிறிது நாட்களே ஆன நிலையில் அவர் காரை வேகமாக ஓட்டியுள்ளார்.

அப்போது கார் பஞ்சாயத்து அலுவலக பகுதியி வந்த போது, திடீரென்று நின்று கொண்டிருந்த பால் வண்டியின் மீது மோதியது.

இதன் காரணமாக அங்கு இரு தரப்பினருக்கிடையே வாக்குவாதம் சென்றதால், அங்கு சமரசமாகிவிட்டு, காரை ஓட்டி வந்த போது, காரானது, சாலையோரம் கூட்டமாக நின்ற துப்புரவு தொழிலாளர்கள் கூட்டத்துக்குள் புகுந்தது.

இதில் துப்புரவு தொழிலாளி தமிழரசன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் 3 பேர் காயமடைந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தின் காரணமாக, ஜெகந்நாத்துக்கு இன்று நடைபெறுவதாக இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்