காதலனால் கர்ப்பமான கல்லூரி மாணவி... நைசாக கருக்கலைப்பு செய்த போது நடந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் கருக்கலைப்பின் போது உயிரிழந்த கல்லூரி மாணவி மற்றும் அவர் வயிற்றில் இருந்த கருவை தீயிட்டு எரித்த காதலனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் எஸ்தர் ராணி (23). இவர் கல்லூரியில் படித்து வந்தார்.

இந்நிலையில் இளைஞர் ஒருவரை காதலித்து வந்த ராணி அவரால் கர்ப்பமானார்.

பின்னர் தனது வீட்டுக்கு இந்த விடயம் தெரிந்தால் பிரச்னை ஏற்படும் என நினைத்த ராணி காதலனுடன் சேர்ந்து கர்ப்பத்தை கலைக்க முடிவு செய்து யாருக்கும் தெரியாமல் தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.

அங்கு கருக்கலைப்பு சிகிச்சையின் போது ராணி உயிரிழந்தார், இதையடுத்து இது பொலிசாருக்கு தெரிந்தால் வழக்கில் சிக்குவோம் என நினைத்த ராணியின் காதலன், ராணியின் சடலம் மற்றும் அவரின் கருவை காரில் வைத்து கொண்டு அங்குள்ள நெடுஞ்சாலைக்கு சென்றார்.

பின்னர் இரு சடலங்கள் மீது நண்பர்கள் உதவியுடன் பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிட்டு அங்கிருந்து தப்பி தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதனிடையில் மகளை காணவில்லை என ராணியின் பெற்றோர் பொலிசில் புகார் அளிக்க பொலிசார் அவரை தேடி வந்தனர்.

அந்த சமயத்தில் தீயில் எரிக்கப்பட்ட சடலத்தை பார்த்து அது ராணி தான் என அடையாளம் கண்டனர்.

இது குறித்த விசாரணையின் பேரில் ராணியின் காதலன் உள்ளிட்ட சிலரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்