நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாசம்! அவர்களை வலையில் வீழ்த்தியது எப்படி? திடுக்கிடும் பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் நூற்றுக்கும் அதிகமான பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி அவர்களுடன் ஜாலியாக இருந்துவிட்டு பின்னர் தலைமறைவான இளைஞர் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒடிசா மாநிலத்தின் புவனேஷ்வரை சேர்ந்தவர் பிரியஞ்சன் நாயக். இவர் பல பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி அவர்களுடன் உல்லாசம் அனுபவிப்பார்.

பின்னர் அதை வைத்தே அவர்களை மிரட்டி பணம் பறிப்பார், இப்படி பலரை அவர் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஒரு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிசார் அவரை முன்னர் கைது செய்தனர்.

ஆனால் பிரியஞ்சன் எப்படியோ ஜாமீனியில் வெளியில் வந்துள்ளார். அதன்பின்னரும் அவர் தனது லீலைகளை தொடந்துள்ளார்.

சமீபத்தில் பெண்ணொருவர் பிரியஞ்சனால் பாதிக்கப்பட்ட நிலையில் தைரியமாக புகார் கொடுத்தார்.

அவர் கூறுகையில், என்னை திருமணம் செய்து கொள்வதாக பிரியஞ்சன் கூறியதை நம்பி இருவரும் நெருக்கமாக இருந்தேன்.

பின்னர் அதை வைத்தே என்னை மிரட்டி என்னிடம் இருந்து ரூபாய் ஒன்றரை லட்சத்தை அவர் வாங்கிவிட்டு தலைமறைவானார்.

பிரியஞ்சன் நூற்றுக்குக்கும் மேற்பட்ட பெண்களிடம் இப்படி ஏமாற்றியுள்ளார். ஆனாலும் அவருக்கு ஜாமீன் கிடைத்துவிடுகிறது என வேதனையுடன் கூறினார்.

இது குறித்து சமூக ஆர்வலர் ரிதுபர்மா கூறுகையில், பிரியஞ்சன் தான் ஒரு மருத்துவர், தொழிலதிபர், அரசு ஊழியர் என விதவிதமாக பொய் சொல்லி பெண்களை மயக்குவார்.

முக்கியமாக விவாகரத்து ஆன பெண்கள், விதவைகள், தனியாக வசிக்கும் பெண்கள் தான் அவரின் குறியாக இருந்துள்ளனர்.

பிரியஞ்சனால் பாதிக்கப்பட்ட பெண் தான் அவரை ஜாமீனில் எடுத்தார் என்பது அதிர்ச்சிக்குரிய விடயம் என கூறியுள்ளார்.

இந்நிலையில் பிரியஞ்சன் மீது பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்