ஒரு மாதமாக உணவு சாப்பிடவில்லை! உயிரோடு ஜீவசமாதி அடைய போகும் தமிழ் சாமியார்... குவிந்த மக்கள்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் சாமியார் ஒருவர் உயிரோடு ஜீவசமாதி அடைய போவதாக கூறிய நிலையில் அதை காண பக்தர்கள் குவிந்து வருகிறார்கள்.

சிவகங்கையின் பாசாங்கரை கிராமத்தை சேர்ந்தவர் இருளன் (80).

இவர் அப்பகுதியில் ஜோதிடம் பார்ப்பதுடன் அருள்வாக்கு கூறி வருவதால் சாமியார் என்று மக்கள் இவரை அழைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் செப்டம்பர் 12 ஆம் திகதியான இன்று நள்ளிரவு முதல் 13ஆம் திகதி அதிகாலை 5 மணிக்குள் ஜீவசமாதி அடையப் போவதாக இருளன் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த ஒரு மாதமாக உணவு எதுவுமின்றி தண்ணீர் மட்டும் அருந்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனை கேள்விப்பட்டு கடந்த ஒரு மாதமாக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாசாங்கரை கிராமத்துக்கு வந்து அவரை வணங்கிச் செல்கின்றனர்.

இதற்கிடையே சாமியார் ஜீவசமாதி அடையப்போவதாக கூறிய நேரம் நெருங்கி வருவதால் பொலிசார் அவரை ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers