கனடா செல்லும் ஆசையுடன் இருந்த இளம்பெண்... எமனாக மாறிய திருமண பதாகை

Report Print Vijay Amburore in இந்தியா

சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இளம்பெண் மீது அதிமுக பதாகை விழுந்து விபத்து ஏற்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சென்னையை சேர்ந்த சுபஸ்ரீ (23) என்கிற இளம்பெண் கனடா செல்வதற்கான தேர்வை எழுதிவிட்டு மகிழ்ச்சியுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்துள்ளார்.

அந்த சாலை பகுதி முழுவதும் அதிமுகவை சேர்ந்த ஜெய்கோபால் என்பவர், தனது வீட்டு திருமணத்திற்காக ஏராளமான பதாகைகளை வைத்திருந்துள்ளார்.

சுபஸ்ரீ வந்த நேரத்தில் பதாகை ஒன்று திடீரென சரிந்ததில், நிலைதடுமாறி தண்ணீரில் லொறியின் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார். இதனை பார்த்து அங்கிருந்த சிலர் பதறி போய் வேகமாக மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று காப்பாற்ற முயற்சித்துள்ளனர்.

ஆனால் துரதிஷ்டவசமாக அந்த இளம்பெண் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக சாலைகளின் நடுவில் பதாகை வைக்க நீதிமன்றம் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்