இளம் பெண்ணின் உடலை அடக்கம் செய்வதற்காக நடந்த சம்பவம்... வெளிச்சத்திற்கு வந்த திடுக்கிடும் உண்மை

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் இறந்த தாயை அடக்க செய்வதற்காக குழந்தை விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில், அக்காள் கணவரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையம் ஸ்டாலின் நகரில் வசிப்பவர் ஆனந்த்(35). இவர், அதே பகுதியில் தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார்.

இவரது சொந்த ஊர் மயிலாடுதுறை என்பதால் மனைவி செல்வி அங்கு வசித்து வந்தார்.

செல்வியின் தங்கை தமிழ்ச்செல்வி (27) திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழ்ச்செல்வி அக்காள் கணவர் ஆனந்துடன் ஸ்டாலின் நகரில் வசித்து வந்துள்ளார்.

இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால் கடந்த 6-ஆம் திகதி பிரசவத்திற்காக ஆனந்த் சூலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், தமிழ்ச்செல்வி இறந்துவிட்டார். இதனால் அவரின் உடலை மயிலாடுதுறை கொண்டு செல்ல பணம் இல்லை.

இதையடுத்து ஆனந்துடன் பணிபுரியும் செல்வி என்பவர் தனக்குத் தெரிந்த உறவினர் ஒருவருக்கு திருமணமாகி 15 ஆண்டாக குழந்தை இல்லை.

அவர்களுக்கு இந்த குழந்தையை கொடுத்தால் பணம் தருவார்கள் என கூறியுள்ளார்.

இதையடுத்து குழந்தையை அந்த தம்பதிக்கு 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளனர். அந்த பணத்தை வைத்து ஆனந்த் இறந்துபோன தமிழ்ச்செல்வியின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

குழந்தையை விற்கப்பட்ட தகவல் கோயமுத்தூர் மாவட்ட சைல்டு லைன் அமைப்புக்கு கிடைத்துள்ளது.

அதைத்தொடர்ந்து, சைல்டுலைன் அமைப்பினர் குழந்தையை பெற்ற தம்பதியிடம் விசாரித்தனர். அவர்கள் குழந்தையை ஒப்படைப்பதாக கூறியுள்ளனர். மேலும் ஆனந்த் மற்றும் அவருக்கு உதவிய செல்வி ஆகியோரை பொலிசார் தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்