ரோட்டில் பிரசவித்த பெண்.. தொப்புள் கொடியுடன் துடித்த குழந்தை: இந்தியாவையே கலங்க வைத்த காட்சி

Report Print Basu in இந்தியா

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ரோட்டில் பிரசவத்த அவலம் ஏற்பட்டுள்ளது.

மணிப்பூரி அரசு மருத்துவமனையிலே இத்துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. நிறைமாத கர்ப்பிணி பெண் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அனுமதி பெற அவரிடம் மருததுவமனை தரப்பில் கட்டணம் செலுத்த கூறியுள்ளனர்.

பெண்ணால் கட்டணம் செலுத்த முடியாததால் அவருக்கு மருத்துவமனை நிர்வாகம் அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், மற்றொரு மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரைத்துள்ளது.

அங்கிருந்து சென்ற பெண் மருத்துவமனையின் வாயில் அருகேயே சாலை ஓரத்தில் குழந்தையை பிரசவித்துள்ளார். தொப்புள் கொடியுடன் குழந்தை சாலையில் துடித்த காட்சிகளை அங்கிருந்தவர்கள் படமெடுத்து வெளியிட்டுள்ளனர்.

Twitter

வீடியோவை காண

சுமார் 30 நிமிடங்களுக்கு பின் அங்கு வந்த மருத்துவகுழுவினர், தாயையும்-குழந்தையையும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் பொலிசில் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்