சுபஸ்ரீ மரணம் எதிரொலி.. திமுக தலைவர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு

Report Print Basu in இந்தியா

சென்னையில் அதிமுக பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம் பெண் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விதிகளை மீறி பேனர் வைக்கும் அரசியல் கட்சியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என சில மாதங்களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது நினைவுக்கூரதக்கது.

இந்நிலையில், இன்று பேனர்கள் விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம் என சுபஸ்ரீ இறந்தது தொடர்பான முறையீட்டின் போது நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது கட்சியினருக்கு அறிவுறுத்த வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியது.

இதனிடையே, சுபஸ்ரீ மரணத்தின் எதிரொலியாக திமுக தலைவர் ஸ்டாலின் கட்சியினருக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

அதில், திமுக நிகழ்ச்சிகளுக்காக பேனர்கள், கட்டவுட்கள் வைக்க கூடாது என கட்சியினருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், இந்த அறிவுரையை திமுக-வினர் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதே சமயம் பேனர் வைத்திருக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டேன் என திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

அமமுக நிர்வாகிகள், தொண்டர்கள், கழக நிகழ்ச்சிகளுக்கு பேனர்கள் வைக்கவேண்டாம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்