எங்களை விட சுபஸ்ரீயை அதிகம் நேசித்துவிட்டார்: அலுவலக நண்பர்கள் உருக்கம்

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தின் சென்னையில் பதாகை சரிந்து ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்த சுபஸ்ரீயின் அலுவலக நண்பர் ஒருவரின் பதிவு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பதாகை சரிந்து விழுந்ததில் இளம்பெண் சுபஸ்ரீ நிலைதடுமாறி சாலையில் விழுந்தார்.

அப்போது பின்னால் வந்த தண்ணீர் லொரி, சுபஸ்ரீ மீது மோதியதில் அவர் பரிதாபமாக மரணமடைந்தார்.

இந்த விபத்து தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களிலும் இந்த சம்பவம் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

அந்த வகையில் டுவிட்டரில் பலரது கவனத்தை ஈர்த்த #WhoKilledShubashree என்ற ஹேஸ்டேக்கை பயன்படுத்தி அன்பழகன் சேகர் என்ற நபர் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘சுபஸ்ரீ எனது அலுவலக நண்பர். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்’ என பதிவிட்டுள்ளார்.

அத்துடன் சுபஸ்ரீயின் இருக்கை மற்றும் கணினியின் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். சுபஸ்ரீயின் இருக்கைக்கு அருகே மலர்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன.

அந்தப் புகைப்படத்தில் ‘நாங்கள் சுபஸ்ரீயை அதிகம் நேசித்தோம், ஆனால் கடவுள் அதைவிட அதிகமாக நேசித்துவிட்டார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது பலரது கண்களை கசியவைத்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers