பாஜக மூத்த தலைவரின் படுக்கையறையை பூட்டி சீல் வைத்த பொலிசார்... பெண்ணின் முன் நடத்தப்பட்ட விசாரணை..

Report Print Abisha in இந்தியா

உத்தரப்பிரதேசத்தில் பாலியல் புகாருக்கு ஆளான பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தாவின் ஆசிரமத்தில் அதிரடி சோதனை நடத்திய பொலிசார் தடயியல் நிபுணர்கள் மூலம் பல ஆதாரங்கள் திரட்டியுள்ளனர்.

பாஜகவின் முக்கிய தலைவர்களினல் ஒருவரான சின்மயானந்தா மீது பெண் ஒருவர் பாலியல் புகார் ஒன்றை சமூகவலைதளம் வாயிலாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தொடர் விசாரணை நடத்தப்பட்டது. பின் அவரது ஆசிரமத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது தொடர்ந்து ஆதாரங்கள் கைப்பற்றியபின் சொகுசு படுக்கை வசதி கொண்ட அவருடைய படுக்கையறை சீல் வைக்கப்பட்டது.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிறப்புப் புலனாய்வு போலீசார் புகார் அளித்த சட்டக் கல்லூரி மாணவியான இளம் பெண்ணையும் ஷாஜகான்புர் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.அப்போது அந்தப் பெண்ணின் முன்னிலையில் சின்மயானந்தாவிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் அந்த இளம் பெண் தங்கியிருந்த விடுதி மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.

துறவியாக வலம் வரும் மிகப்பெரிய தலைவர் ஒருவர் தன்னை ஒருவருடகாலமாக மிரட்டி பாலியல் பலவந்தம் செய்ததாக அந்த மாணவி சமூக ஊடகங்களில் புகார் அளித்த நிலையில் இந்த வழக்கு விஸ்வரூபம் எடுத்தது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்