'ஜீவசமாதி அடைய போகிறேன்': கூடிய மக்கள்- பிரம்மிப்பில் ஒத்திவைத்து உறங்கிய சாமியார்!

Report Print Abisha in இந்தியா

ஜீவசமாதி அடைய போகிறேன் என்று ஆட்களை கூட்டி சாமியார் ஒருவர் உறங்கிய சம்பவம் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது.

சிவகங்கையின் பாசாங்கரை கிராமத்தை சேர்ந்தவர் இருளன் (80).

இவர், அடிக்கடி குடும்பத்தினரிடம் கூறாமல் எங்கயாவது செல்வது பின் திரும்பி வந்து தன்னை சிவ பக்தன் என்று பெருமை பேசி கொள்வது, குறி சொல்வது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் செப்டம்பர் 12 ஆம் திகதியான இன்று நள்ளிரவு முதல் 13ஆம் திகதி அதிகாலை 5 மணிக்குள் ஜீவசமாதி அடையப் போவதாக இருளன் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த ஒரு மாதமாக உணவு எதுவுமின்றி தண்ணீர் மட்டும் அருந்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனை கேள்விப்பட்டு கடந்த ஒரு மாதமாக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாசாங்கரை கிராமத்துக்கு வந்து அவரை வணங்கிச் செல்கின்றனர்.

இதற்கிடையே சாமியார் ஜீவசமாதி அடையப்போவதாக கூறிய நேரம் நெருங்கி வருவதால் பொலிசார் மற்றும் மருத்துவ குழுவினர் அவரை கண்காணிக்க துவங்கினர்.

நேரம் காலை 5 மணியை கடந்து சென்ற நிலையில் இருளப்பனின் உடல்நிலையில் எவ்விதமான மாற்றமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக ஐந்தே முக்கால் மணியளவில் தனது ஜீவசமாதி முடிவை இருளப்பன் ஒத்திவைப்பதாக அறிவித்துவிட்டு சாவகாசமாக அங்கேயே படுத்து உறங்கிவிட்டார். விடிய விடிய விழிகள் வலிக்க உறங்காமல் காத்திருந்த அத்தனை பேரும் இதனைக் கண்டு நொந்து ஏமாந்து சென்றனர்.

இது குறித்து பேசிய இருளப்பனின் மனைவி இவர் ஜீவசமாதி அடைவார் என்ற நம்பிக்கை எல்லாம் எனக்கு இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்