வீட்டில் தனியாக இருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபநிலை.. அதன் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணிற்கு பெண் பொலிஸ் பிரசவம் பார்த்த சம்பவம் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

சென்னை சூளைமேடு சவுராஷ்ட்ரா நகரைச் சேர்ந்தவர் பானுமதி. நிறைமாத கர்ப்பிணியான இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு இரவு நேரத்தில் திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டதால், வலியால் துடித்துள்ளார். ஆனால் அப்போது உதவிக்கு யாரும் இல்லாத காரணத்தினால், மருத்துவமனைக்கு செல்வதற்காக சூளைமேடு நெடுஞ்சாலைக்கு நடந்து வந்துள்ளார்.

அப்போது வலி அதிகமானதால், சாலையில் தடுமாறி கீழே விழ, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குற்றப்பிரிவு ஆய்வாளர் சித்ரா, பானுமதியைக் கண்டு பதறி போய் அவரை மீட்டு சாலையோரத்தில் அமர வைத்துள்ளார்.

அதன் பின் விசாரித்த போது, பானுமதி பிரசவ வலியைப் பற்றி கூறி, வலியால் துடித்துள்ளார். இதனால் நிலைமையை உணர்ந்த சித்ரா, உடனடியாக அங்கிருந்த துப்புரவு தொழிலாளிகளுடன் சேர்ந்து பிரசவம் பார்த்துள்ளார்.

இதில் பானுமதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பின் தாயும், சேயும் இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

சித்ராவின் இந்த செயல், சமூகவலைத்தளங்களில் வைரலாக, அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers