வேறு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த கணவன்.. கையும் களவுமாக பிடித்த மனைவி! அடுத்து நடந்த சம்பவம்

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில், வேறு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த கணவனை கையும் களவுமாக பிடித்த மனைவி, அடித்து உதைத்து பொலிசில் ஒப்படைத்த சம்பவம் நடந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் கோபால். இவருக்கு அனிதா என்ற பெண்ணுடன் திருமணமாகி, இரண்டு பிள்ளைகள் உள்ளன.

இந்நிலையில் கோபால் கடந்த சில ஆண்டுகளாகவே வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த அனிதா, ஆழ்வார் சுபாஷ் நகரில் வேறு பெண்ணுடன் தனது கணவர் குடும்பம் நடத்தி வந்ததை கண்டுபிடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, தனது உறவினர்களுடன் அங்கு சென்ற அனிதா, தனது கணவர் குறித்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததைக் கண்டு ஆத்திரமடைந்துள்ளார்.

உடனே கோபாலை சாலையில் இழுத்து வந்து உறவினர்களுடன் சேர்ந்து சரமாரியாக அனிதா தாக்கியுள்ளார். அப்போது தனது கள்ளக்காதலியை காப்பாற்ற முயன்றதால் அனிதா தனது கணவரை செருப்பால் அடித்தார்.

பின்னர் அவரை இழுத்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். தனது கணவனை கையும் களவுமாக பிடித்து மனைவியே அடித்து உதைத்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers