மாமனார் வீட்டிற்கு வெளியே கதறி அழுத ஐஸ்வர்யா ராய்: சர்ச்சையான புகைப்படம்!

Report Print Vijay Amburore in இந்தியா

பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மருமகள் ஐஸ்வர்யா, அழுதுகொண்டே வீட்டிலிருந்து வெளியேறும் புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப்பிற்கும், ராஷ்டிரிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ சந்திரகா ராயின் மகள் ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது.

ஆனால் திருமணம் முடிந்த சில நாட்களிலே தம்பதியினருக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனால் அடுத்த 6 மாதத்தில் விவாகரத்து கேட்டு தேஜ் பிரதாப் விண்ணப்பித்தார். அதேசமயம் அவருடைய மனைவி கொடுத்த புகாரில், தேஜ் பிரதாப் போதைக்கு அடிமையாகி இருப்பதாகவும், தன்னை சிவன் என்று கூறிக்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் இரண்டு குடும்பத்தினர் பல்வேறு பேச்சு வார்த்தைகளை நடத்தி இருவரையும் ஒன்றாக வாழ வைக்க முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் மாமனார் வீட்டிலேயே தங்கி வந்த ஐஸ்வர்யா ராய், இன்று திடீரென அங்கிருந்து கதறி அழுதபடி கையில் சூட்கேசுடன் வெளியேறியுள்ளார்.

இந்த விவகாரமானது மாட்டு தீவின ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் லாலுவிற்கு மேலும் பெரிய தலைவலியை கொடுத்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்