74 வயதில் இரட்டை குழந்தை பெற்றெடுத்த பெண்... அடுத்த சில நாட்களில் அவர் கணவருக்கு என்ன நடந்தது தெரியுமா?

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் 74 வயதில் இரட்டை குழந்தை பெண் பெற்றெடுத்த நிலையில், அவரின் கணவருக்கு குழந்தை பிறந்த சில நாட்களிலே மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி பகுதியில் உள்ள நெலாபார்டிபாடு கிராமத்தைச் சேர்ந்த எர்மாட்டி ராஜா ராவ் (80), இவர் எர்மாட்டி மங்கம்மா(74) என்பவரை கடந்த 1962-ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.

திருமணம் முடிந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், குழந்தை பிறக்காததால், மிகுந்த வேதனையில் இருந்தனர்.

முதுமை கூடினாலும், துவளாத மங்கம்மா, 55 வயதான பெண் ஒருவர் கருத்தரித்த செய்தியைக் அறிந்து, குண்டூரில் உள்ள அஹல்யா என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

மங்கம்மாவிற்கு மாத விலக்கு முற்றிலும் நின்று பல ஆண்டுகள் ஆகிவிட்டதால், செயற்கை முறையயில் மாதவிலக்கு வர முயற்சி செய்துள்ளனர். அதன் படி ஒரே மாதத்தில் மாத விலக்கு வர, அதன் பின் ஐ.வி.எப் (In Vitro Fertilisation) முறையில் கருத்தரிக்க வைத்துள்ளனர்.

அதன் பயனாக கடந்த வாரம் மங்கம்மாவிற்கு இரண்டு குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிறந்தது. 74 வயதில் குழந்தை பெற்றதால், இது உலகசாதனையாகவும் பார்க்கப்பட்டது.

இதையடுத்து குழந்தை பிறந்து வாரங்கள் கடந்த நிலையில், மங்கம்மாவின் கணவர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பல ஆண்டுகள் கழித்து குழந்தை பிறந்ததால், கணவர் எர்ரமாட்டி ராஜா ரா மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார். அதுமட்டுமின்றி இதுக்கு எல்லாம், கடவுள் மற்றும் மருத்துவருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்று உணர்ச்சி பொங்க கூறினார்.

இப்படி ஆசை நிறைவேறிய நிலையில், தற்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...