கடைசி வரை மகள் திருமணத்தை பார்க்காமல்... நிறைவேறாத ஆசைகளுடன் மீண்டும் சிறையில் அடைக்கப்படும் நளினி

Report Print Basu in இந்தியா

மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான நளினி ஸ்ரீஹரனின் பரோல் செப்டம்பர் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இன்றுடன் முடிந்து இன்று மீண்டும் சிறை செல்கிறார்.

நளினி தனது பரோலை நீட்டிக்கக் கோரி அளித்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்ததையடுத்து அவர் இன்று மீண்டும் சிறை செல்கிறார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர் கடந்த 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில் நளினி மற்றும் முருகனின் மகள் ஹரித்ராவின் திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக ஒரு மாத காலம் பரோலில் நளினி விடுவிக்கப்பட்டார்.

இதனையடுத்து நளினியின் பரோல் காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், அவர் தனது பரோல் காலத்தை மேலும் நீட்டிக்கக் கோரி தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் தனது மகளை திருமணத்தை பார்க்காமலே நளினி பரோல் காலம் முடிந்து இன்று சிறை செல்கிறார்.

நளினியின் கணவர் முருகனும் தனது மகள் திருமணத்திற்காக ஒரு மாத பரோல் கேட்டு சிறை நிர்வாகத்திடம் அளித்த மனுவும் நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து சிறை நிர்வாக அனுமதியுடன் நேற்று வேலூர் மத்திய சிறையில் தனது கணவர் முருகனை நளினி சந்தித்து பேசினார். பின்பு பலத்த பாதுகாப்புடன் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்ட நளினி இன்று மீண்டும் சிறையில் அடைக்கப்பட இருக்கிறார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்