இலங்கையில் இருந்து பயங்கராவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை...சிக்கிய வெளிநாட்டு இளைஞர்

Report Print Santhan in இந்தியா

இலங்கையில் இருந்து பயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுவியிருப்பதாக, வெளியான எச்சரிக்கையை தொடர்ந்து, நடத்தப்பட்ட தீவிர சோதனையில் வங்கதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து பயங்கரவாதிகள் சிலர் தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாக கடந்த ஆகஸ்ட் மாதம் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.

இதனால் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பல இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் கோயமுத்தூரில் இருக்கும் ஆர்.எஸ்.புரமில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் வங்கதேசத்தை சேர்ந்த பாரூக் கவுசீர் என்ற இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவர், கோவை காந்தி பார்க் பகுதியில் உள்ள நகைப் பட்டறை ஒன்றில், பணியாற்றி வந்துள்ளார்.

வங்கதேசத்தை சேர்ந்த இவர், பாகிஸ்தான் முஜாகிதீன் என்ற வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பணியாற்றி வந்தது தெரியவந்ததால், பொலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்