பள்ளி மாணவிகள் மீது ஆசை! ஆசிரியர் செய்து வந்த மோசமான செயல்.. அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பவானியை அடுத்த விதைப்பண்ணை அருகே வசித்து வருபவர் சக்திவேல் (47). இவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தாவரவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

சக்திவேல் 11-ம் வகுப்பு மாணவிகளிடம் தவறான முறையில் நடப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக 11-ம் வகுப்பை சேர்ந்த இரண்டு மாணவிகளை குறிவைத்து அவர்களிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்ததுள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட இரு மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்ததையடுத்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஆத்திரத்துடன் பள்ளிக்கு வந்து சக்திவேலை பணி நீக்கம் செய்திட வலியுறுத்தினர்.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்நிலையில் ஆசிரியர் சக்திவேல் தலைமறைவானார்.

புகாரின் பேரில் சக்திவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை பொலிசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த சக்திவேலை பொலிசார் கையும் களவுமாக பிடித்தனர்.

அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்