கனடா செல்லும் ஆசையுடன் இருந்த சுபஸ்ரீயின் மரணத்திற்கு முக்கிய காரணமான நபர் இவர் தான்! தனிப்படை தீவிரம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் சுப்ஸ்ரீ என்ற பெண் மீது பேனர் விழுந்ததால், அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து, பின்னால் வந்த லாரி ஏறி உயிரிழந்த சம்பவத்தில், பேனர் வைத்த நபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த சுபஸ்ரீ (23) என்கிற இளம்பெண் கனடா செல்வதற்கான தேர்வை எழுதிவிட்டு மகிழ்ச்சியுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்துள்ளார்.

அந்த சாலை பகுதி முழுவதும் அதிமுகவை சேர்ந்த ஜெய்கோபால் என்பவர், தனது வீட்டு திருமணத்திற்காக ஏராளமான பதாகைகளை வைத்திருந்தார்.

அப்போது குரோம்பேட்டை பவானி நகரில் இருந்த பேனர் விழுந்ததால் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பின்னால் வந்த லாரி ஏறி உயிரிழந்தார். இந்த சம்பவம், சிசிடிவி காட்சியாக வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கனடா செல்வதற்காக ஆசையுடன் இருந்த அவரின் மரணம் குடும்பத்தினருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக லாரி ஓட்டுநர் மனோஜ் கைது செய்யப்பட்டுள்ளார். இதே போல, பேனர் வைத்த பேனர் அடித்து கொடுத்த அச்சகத்திற்கும் சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில், பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை பொலிசார் தற்போது வரை கைது செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தேடப்பட்டு வந்த ஜெயகோபால் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு, பள்ளிக்கரணை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதால், பொலிசார் அங்கு விரைந்த‌னர்.

ஆனால், அங்கு ஜெயகோபால் இல்லாத‌தால் ஏமாற்றம் அடைந்த பொலிசார், தனிப்படை அமைத்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்