ஏற்கனவே அனுபவித்துவிட்டார்! திடீரென விடுவிக்கப்பட்ட இலங்கை தமிழர்.. புகைப்படத்துடன் வெளியான பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை தமிழர் ஒருவருக்கு ஐந்து மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட போதும், அவர் ஏற்கனவே சிறைவாசம் அனுபவித்ததால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை திரிகோணமலை பகுதியை சேர்ந்த குமரகுருபரன் என்பவரது மகன் மோகனரூபன் ( 25).

இவர் இலங்கையில் நடைபெற்ற போரின் போது அங்கிருந்து குடும்பத்துடன் தமிழகம் வந்து தங்கியிருந்தார்.

அதன் பின்னர் இலங்கையில் அமைதி திரும்பியதும் குடும்பத்துடன் அங்கு சென்ற அவர் மண்டபம் முகாமில் உள்ள பாட்டியை பார்ப்பதற்காக சுற்றுலா விசாவில் கடந்த 2015-ம் ஆண்டு ராமநாதபுரம் வந்துள்ளார்.

விசா காலம் முடிந்த பின்னரும் சட்ட விரோதமாக தங்கி இருந்து பெயிண்டராக வேலையும் பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் மோகனரூபன் நின்று கொண்டிருந்தார்.

அப்போது பொலிசார் அவரை பிடித்து விசாரித்ததில் விசா காலம் முடிந்து உரிய ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

விசாரணை முடிவில், மோகனரூபனுக்கு 5 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் கைது செய்யப்பட்ட நாளில் இருந்து தண்டனை அறிவிக்கப்பட்ட நாள் வரை சிறையில் இருந்ததால் தண்டனை காலத்தினை அனுபவித்ததாக கருதி அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து அவரை இலங்கைக்கு அனுப்பி வைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் வரை சிறப்பு முகாமில் தங்க வைக்க காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers