கழிவறையில் கிடந்த பெண் சிசுவின் சடலம்

Report Print Vijay Amburore in இந்தியா

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை கழிப்பறையில் பெண் சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கழிப்பறையை சுத்தம் செய்வதற்காக ஊழியர்கள் உள்ளே சென்றனர்.

அப்போது பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் சிசு ஒன்று தலைகுப்புற கழிவறையில் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் மருத்துவர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக அங்கு வந்த மருத்துவர்கள் பெண் சிசுவை எடுத்து சென்று சிசுவின் உடலை, மருத்துவ கழிவுகள் கொட்டுகின்ற குப்பைத் தொட்டியில் வைத்திருந்துள்ளனர்.

இந்த விவகாரமானது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், குழந்தை அந்த மருத்துவமனையில் பிறந்து இல்லை என்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers