லண்டனில் உள்ள நளினி மகளுக்கு திருமணம் செய்து கொள்ள தற்போது விருப்பமில்லை! வெளியான முக்கிய தகவல்

Report Print Raju Raju in இந்தியா

லண்டனில் உள்ள நளினியின் மகளுக்கு தற்போதைக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாத காரணத்தாலேயே அவர் இந்தியாவுக்கு வரவில்லை என தெரியவந்துள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூர் பெண்கள் சிறையில் இருந்த நளினி தனது மகள் திருமண ஏற்பாட்டுக்காக ஒரு மாதம் பரோலில் விடுவிக்கப்பட்டார்.

ஆனால் மகள் ஹரித்ரா வருவதில் தாமதமான நிலையில் அவருக்கு மேலும் மூன்று வாரங்களுக்கு பரோல் நீட்டிக்கப்பட்டது.

இதையடுத்து பரோலை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கக்கோரி நளினி மீண்டும் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து சற்றுமுன்னர் நளினியை வேலூர் சிறைக்கு பொலிசார் அழைத்து சென்றனர்.

ஹரித்ராவுக்கு ஈழத்தமிழர் ஒருவரைத் தான் மாப்பிள்ளையாகத் தேர்ந்தெடுக்க நளினி விரும்புகிறார் எனவும் மாப்பிள்ளை லண்டனில் வசிப்பவராகக்கூட இருக்கலாம் என்றும் நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி முன்னர் கூறியிருந்தார்.

இதனிடையில் நளினி இவ்வளவு நாள் வெளியில் இருந்தும் ஹரித்ரா ஏன் இந்தியா வரவில்லை என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, அவருக்கு திருமணத்தில் தற்போதைக்கு விருப்பமில்லை.

பெற்றோர் முழுமையாக விடுதலையான பிறகே, திருமணம் செய்துகொள்ள விருப்பப்படுகிறார். இது குறித்து அவர் நளினியிடம் கூறியதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததுடன் உடனே இந்தியா வருமாறு சொல்லியிருக்கிறார்.

ஆனால் ஹரித்ரா லண்டனிலேயே இருக்கிறார் என தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி கூறுகையில், வெளிநாடுகளில் இருப்பவர்களிடம் தான் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருக்கிறது. இந்தியா வர அவர்களில் பலருக்கு விசா கிடைக்கவில்லை.

இதோடு இலங்கையில் உள்ள நளினியின் மாமியாரும் வரவில்லை. நளினி-முருகன் விடுதலையாகி வருவதில் காலதாமதமாகும்.

அதுவரை எதற்கு காத்திருக்க வேண்டும் என மகளுக்குத் திருமணம் முடிக்க நளினி ஆசைப்பட்டார் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்