பள்ளி விடுதியில் புகுந்த விஷப்பாம்பு.. பரிதாபமாக பலியான மாணவி

Report Print Vijay Amburore in இந்தியா

தனியார் விடுதியில் தங்கியிருந்த 9ம் வகுப்பு பள்ளி மாணவி விஷப்பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கொடைக்கானலை சேர்ந்த வர்ஷா என்கிற மாணவி திண்டுக்கல் சவேரியார் பாளையம் அருகேயுள்ள தனியார் விடுதியில் தங்கி 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று நள்ளிரவு அவர் உறங்கி கொண்டிருந்த சமயத்தில் கொடிய விஷம்கொண்ட 5அடி நீள நல்லபாம்பு ஒன்று கடித்துள்ளது.

இதனையடுத்து வேகமாக மீட்கப்பட்ட வர்ஷா, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்