சுபஸ்ரீ வீட்டில் கமல்ஹாசன்! ஒரே மகளை இழந்த.. மீளா துயரத்தில் கண்ணீர் விட்டு கதறிய பெற்றோர்

Report Print Basu in இந்தியா

சென்னையில் பேனர் சரிந்து விழுந்ததில் உயிரிழந்த சுபஸ்ரீயின் வீட்டிற்கு சென்ற மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், பெற்றோருக்கு நேரில் ஆறுதல் கூறியுள்ளார்.

சென்னைப் பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில் இளம்பெண் சுபஸ்ரீ நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி, சுபஸ்ரீ மீது மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைத்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுபஸ்ரீயின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹான், பேனர் அகற்றுவது போல ஒரு நாடகமாடுவது இனி எடுபடாது என்றும், பேனர் கலாச்சாரத்தை மக்கள் ஒழிப்பார்கள் என்றும், தெரிவித்துள்ளார்.

Twitter

எல்லா குற்றங்களில் இருந்தும் தப்பித்து விடலாம் என்ற நம்பிக்கை இரு கட்சிக்காரர்களுக்கு இருக்கிறது என்றும், அது தகர்க்க பட வேண்டும் என்றும் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.

Twitter

நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்காவிட்டாலும் பரவாயில்லை, உயிரிழந்த சுபஸ்ரீ மீது குற்றம் சொல்லியிருக்க கூடாது என்றும், இனியாவது சம்மந்தப்பட்டவர்கள் தங்களை திருத்திக் கொள்ள ​வேண்டும். குற்றம் தண்டிக்கப்பட வேண்டம் என்றும் கம​ல்ஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Twitter

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்