நீண்ட நாட்களுக்கு பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜயகாந்த்... கண் கலங்கிய மகன்

Report Print Basu in இந்தியா

திருப்பூரில் நேற்று நடைபெற்ற தேமுதிக முப்பெரும் விழாவில் அந்த கட்சி தலைவர் விஜயகாந்த் நீண்ட நாட்களுக்கு பின்னர் பேசினார்.

திருப்பூர் மாவட்ட தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்த நாள்விழா, கட்சியின் 15-ம் ஆண்டு தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா திருப்பூர் – காங்கேயம் சாலையில் உள்ள வேலன் ஓட்டல் மைதானத்தில் நடைபெற்றது.

நீண்ட நாட்களுக்கு பின்னர் கட்சி விழாவில் கலந்துக்கொண்டு பேசிய விஜயகாந்த், உங்கள் அனைவருக்கும் வணக்கம். ஒரு நாள் ஒரு பொழுதாவது இந்த விஜயகாந்த்துக்காக விடியும். அப்போது தமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன். அடுத்த முறை வரும்போது உங்களிடம் 1 மணி நேரம் பேசுவேன்.

இதுபோல் தமிழகம் முழுவதும் செல்வேன். இந்த விழாவில் பங்கேற்க வந்த உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அனைவரும் பத்திரமாக வீட்டுக்கு செல்லுங்கள் என கூறி விடைபெற்றார்.

விழாவில் பேசிய விஜயகாந்த் மகன், விஜய பிரபாகரன், தேமுதிகவை பார்த்து திமுக காப்பி அடிக்கிறது, வயதான கட்சி என்பதால் திமுகவில் இளைஞர்களை சேர்க்கிறார்கள் என விமர்சித்தார்.

மேலும், பலரும் விஜயகாந்த் குறித்து அவதூறு பரப்பினீர்கள் என கலங்கிய விஜய பிரபாகரன், இப்போது சிங்கம் போல கெத்தா உங்கள் முன் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். விரைவில் அவர் ஒவ்வொரு ஊருக்கும் வந்து பல மணிநேரங்கள் பேசுவார் என உறுதியளித்தார்.

இந்த விழாவில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அவருடைய மகன் விஜயபிரபாகரன், கட்சியின் அவைத்தலைவர் இளங்கோவன், கொள்கை பரப்பு செயலாளர் மோகன்ராஜ், துணை செயலாளர்கள் சுதீஷ், பார்த்தசாரதி, அக்பர், சந்திரா ஆகியோர் பேசினார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்