சுபஸ்ரீ உயிரை காவு வாங்கிய அதே இடத்தில் மீண்டும் நடந்த பயங்கரம்!

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் பேனரால் சுபஸ்ரீ உயிரிழந்த அதே இடத்தில் இன்னொரு பேனர் கீழே சாய்ந்ததில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக்கரணை பகுதியில் சாலை ஓரம் வைக்கப்பட்டு இருந்த பேனர் சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது விழுந்த போது பின்னே வந்த லொறி மோதி சம்பவ இடத்திலே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் தங்களுக்கு பேனர் வைக்க வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டனர்.

நீதிமன்ற உத்தரவை அடுத்து சாலையோரம் உள்ள பேனர்களை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் சுபஸ்ரீ உயிரிழந்த பகுதியில் இருந்து 50 அடி தூரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியார் விளம்பர போர்டு இருந்தது.

60 அடி உயரம் உள்ள பேனரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது பேனர் கீழே சாய்ந்ததில் ராஜேஷ் என்ற ஊழியர் படுகாயமடைந்தார். இதனையடுத்து படுகாயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

சுபஸ்ரீ உயிரிழந்த அதே சாலையில் உள்ள பகுதியில் மீண்டும் பேனர் சரிந்து விழுந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்