குடும்பமே ஆவலுடன் எதிர்பார்த்த தருணம்.. பரிதாபமாக பலியான கர்ப்பிணி

Report Print Vijay Amburore in இந்தியா

மதுரையில் மருத்துவர் இல்லாத சமயத்தில் செவிலியர் சிகிச்சை பார்த்ததால் நிறைமாத கர்ப்பிணி பரிதாபமாக இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையை சேர்ந்த மணிமுத்து (29) என்பவரின் மனைவி சக்திகாளி (22), நேற்றைக்கு முன்தினம் பிரசவத்திற்காக ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர் இரவு 8 மணிக்கு குழந்தை பிறக்கலாம் என தெரிவித்துள்ளார். ஆனால் 8 மணியை தாண்டியும் குழந்தை பிறக்கவில்லை. இதுகுறித்து அங்கிருந்த செவிலியர்களிடம் கேட்டபொழுது 9 மணிக்கு பிறக்கும் என தெரிவித்துள்ளனர்.

ஆனால் 9 மணியை தாண்டியும் குழந்தை பிறக்காத நிலையில், சக்திகாளி இறந்துவிட்டதாக செவிலியர்கள் அவருடைய கணவரிடம் கூறியுள்ளனர்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மணிமுத்து, எப்படியும் மனைவியை காப்பற்றிவிடலாம் என அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றுள்ளார். ஆனால் அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாமல் செவிலியர்கள் சிகிச்சை அளித்ததே தன்னுடைய மனைவியின் மரணத்திற்கு காரணம் என மணிமுத்து புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நேற்றைக்கு முன்தினம் மதியம் மருத்துவர் பரிசோதனை செய்துவிட்டு தாயும், குழந்தையின் நலமாக இருப்பதாகவும், இரவு 8 மணிக்கு பிறந்துவிடும் என்றும் கூறியிருந்தார்.

ஆனால் அந்த நேரத்தில் பிறக்கவில்லை. என்னுடைய மனைவி கதறும் சத்தம் மட்டும் கேட்டது. எங்களையும் உள்ளே அனுமதிக்கவில்லை. வேறு மருத்துவமனைக்கும் கொண்டுசெல்ல அனுமதிக்கவில்லை. உள்ளே சென்று பார்த்த போது, இரத்தப்போக்கு வெளியேறி என்னுடைய மனைவி இறந்து கிடந்தார். அந்த இடத்தில் மருத்துவர் இல்லை, மாறாக செவிலியர்கள் மட்டுமே இருந்தனர் எனக்கூறி பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers