தமிழகத்தில் டிப்டாப் உடையில் வந்த வெளிநாட்டு இளம்பெண் செய்த மோசமான செயல்.. சிசிடிவி வீடியோ வெளியானது!

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் வெளிநாட்டு தம்பதி ஒரு கடைக்குள் வந்து நைசாக அங்கிருந்தவர்களை திசைதிருப்பி பணத்தை திருடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தின் முத்துப்பேட்டையில் மொத்த மளிகை கடை வைத்திருப்பவர் முகமது சபியுல்லா (32).

இவரது கடைக்கு நேற்று முன்தினம் மாலை சுமார் 4 மணியளவில் டிப்டாப் உடை அணிந்த வெளிநாட்டு தம்பதியினர் வந்தனர்.

அப்போது அந்த ஆண் கடை உரிமையாளரிடம் பிளேடு வாங்கியுள்ளார்.

பின்னர் தான் வெளிநாட்டில் இருந்து சுற்றுலா வந்துள்ளதாகவும், தன்னிடம் வெளிநாட்டு பணம் உள்ளதாகவும் கூறி அறிமுகம் செய்துகொண்டார்.

பின்னர், தனது பர்சில் உள்ள வெளிநாட்டு பணத்தை காட்டி எங்கே இந்த பணத்தை மாற்றலாம் என்று கேட்டார்.

இதையடுத்து இந்தியா பணத்தில் சிஎல் என்று போட்ட சீரியல் நம்பர் உள்ள பணம் உங்களிடம் இருக்கிறதா? இருந்தால் தாருங்கள் என்று கேட்டுள்ளார்.

அதன்படி அவரும் கொடுத்துள்ளார். முதலில் 500 ரூபாய் கட்டை பார்த்துவிட்டு கொடுத்தவர், பின்னர் 2 ஆயிரம் ரூபாய் கட்டை வாங்கி பார்த்துவிட்டு கொடுத்துள்ளார். இதற்கிடையில் அவருடன் சிகப்பு கலர் சுடிதார் அணிந்து டிப்டாப்புடன் வந்த வெளிநாட்டு பெண் அங்கு நின்றவர்களிடமும், கடையில் வேலை பார்த்தவர்களிடமும் தொடர்ச்சியாக பேச்சு கொடுத்து செல்போனில் செல்பி எடுத்து அனைவரது கவனத்தையும் திசை திருப்பினார்.

இதனை பயன்படுத்தி கொண்ட அந்த டிப்டாப் ஆசாமி தான் பார்த்த பணக்கட்டுகளில் இருந்து சுமார் ₹30 ஆயிரம் வரை எடுத்துவிட்டு அங்கிருந்து இருவரும் சற்று தூரத்தில் காரில் ஏறி சென்றுவிட்டனர்.

இந்த காட்சிகள் அனைத்தும் கடையில் இருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

பின்னர், அந்த தம்பதி சென்றவுடன் பணக்கட்டுகளை சபியுல்லா சோதித்து பார்த்தபோது ₹30 ஆயிரம் மாயமாகி இருந்தது தெரியவந்தது.

இது குறித்து முகமது சபியுல்லா பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் அவர்களை தேடி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers