சதுரங்க வேட்டை ... பல பெண்களுக்கு தாலி கட்டி உல்லாசமாக இருந்த இளைஞன்! அதிர்ச்சி பின்னணி

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து உல்லாசமாக இருந்த நபர் சிக்கியது எப்படி என்பது குறித்து பின்னணி வெளியாகியுள்ளது.

சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுமி காணவில்லை என்று தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அந்த விசாரணையில் திருப்பூரைச் சேர்ந்த இளைஞன் கைது செய்யப்பட்டான்.

அவன் பல பெண்களை திருமணம் செய்து அவர்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டு, அதன் பின் அவர்களை ஏமாற்றியது அம்பலாமானது.

இந்நிலையில் குறித்த இளைஞன் யார்? ஏன் இந்தளவிற்கு மோசமானவனாக மாறினார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதில், ஆரம்பத்தில் நாங்கள் சிறுமி காணவில்லை என்று தான் நினைத்தோம், ஆனால் விசாரணையில் தான் குறித்த இளைஞன் ராஜேஷ் பிரித்வி சுயரூபம் தெரியவந்தது.

இவன் திருப்பூர் மாவட்டம், வீரபாண்டியைச் சேர்ந்தவர். 7-ஆம் வகுப்பு வரை படித்திருக்கிறார். இவனுடைய அப்பா இறந்துவிட்டார்.

அம்மா கலைவாணி, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். ராஜேஷ் பிரித்விக்கு சகோதரர் இருக்கிறார்.

ஏழமையான குடும்பத்தில் பிறந்த ராஜேசிற்கு ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.

இதனால் டிரைவர் வேலை பார்த்த ராஜேஷ், கோயம்புத்தூருக்குச் சென்றுள்ளார். அங்கு சில காலம் தங்கியிருந்த அவர், ஒருவரை எப்படியெல்லாம் ஏமாற்றலாம் என்பதை சதுரங்க வேட்டை படத்தைப் பார்த்து கற்றுக் கொண்டுள்ளார்.

அதன் பின் அடுத்தவரை ஆசையைத் தூண்டி ஏமாற்றுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். ஏமாற்றுவதற்காகத் தன்னுடைய பெயரை ராஜேஷ் பிரித்வி, ஸ்ரீராமகுரு, தீனதயாளன் என ஒவ்வொரு ஊரிலும் மாற்றி மாற்றிக் கூறிய அவன், தன்னுடைய உண்மையான பெயரை கூறவில்லை.

ஒவ்வொரு பெயருக்கும் ஓர் அரசு ஆவணத்தைத் தயாரித்துள்ளார். குறிப்பாக கோயபுத்தூரில் அவர் தங்கியிருந்த ஒருவார காலகட்டத்தில் ஆதார் கார்டை வாங்கியிருக்கிறார்.

கோயபுத்தூர், திருச்சி, மதுரை, சென்னை ஆந்திரா என உலகம் சுற்றும் வாலிபனாகவே ராஜேஷ் வலம் வந்துள்ளார்.

திருச்சியில் அவர் தங்கியிருந்த சமயத்தில் ஒரு பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். அந்தப் பெண், 8 மாதம் கர்ப்பமாக இருந்தபோதுதான் ராஜேஷ் பிரித்வியின் சுயரூபம் தெரிந்துள்ளது.

இதையடுத்து அந்தப் பெண் திருச்சியில் புகார் கொடுத்துள்ளார். அந்த வழக்கில் கைதான ராஜேஷ் பிரித்வி சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன் பின் அந்த வழக்கில் இருந்து வெளியில் வந்த ராஜேஷ், திருப்பதிக்குச் சென்றுள்ளார். அங்கு வரும் காதல் ஜோடிகளை ஏமாற்றி நகை, பணத்தைப் பறிப்பது, மேலும் சில பெண்களிடம் அத்துமீறியும் நடந்துள்ளார்.

இதுதொடர்பாக திருப்பதி, காளகஸ்தி காவல் நிலையங்களில் இவர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆந்திர பொலிசார் தமிழகத்துக்கு ராஜேஷ் பிரித்வியை அழைத்து வந்தபோது தப்பித்துவிட்டார்.

அதன்பிறகு அவர் பொலிசாரிடம் சிக்கவில்லை. இதற்கிடையில் ராஜேஷ் பிரித்வியால் பாதிக்கப்பட்ட பெண்கள் கோயபுத்தூர், காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்ட காவல் நிலையங்களில் புகார் கொடுத்தார். அந்த வழக்குகளில் அவரைப் பொலிசார் தேடினர்.

இந்த சமயத்தில் தான் சிறுமியை கடத்திய விவகாரத்தில் பொலிசார் தினேஷை தேடியுள்ளனர். அப்போது சென்னை வேளச்சேரியில் தங்கியிருந்த ராஜேஷுக்கு சினிமா சூட்டிங் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்காக வடபழனியில் பொலிஸ் எஸ்.ஐ. சீருடை ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார்.

அந்தச் சீருடையில் வாடகை காரில் வலம் வந்த ராஜேஷ், ஓஎம்ஆர் சாலை மற்றும் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களை மிரட்டி பணம், நகைகளைப் பறித்திருக்கிறார்.

வெளியில் தெரிந்தால் அவமானம் எனக்கருதி பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையங்களில் புகார் கொடுக்கவில்லை. இந்தவகையில் முப்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

அது தவிர, அவன் 10 பெண்களுக்குத் தாலிகட்டி திருமணம் செய்து, அவர்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டு, ஏமாற்றியது தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்