வெளிநாட்டில் பணிபுரியும் தமிழர் ஊருக்கு வந்து செய்து கொண்ட திருமணம்! அவருக்கு குவியும் பாராட்டு.. ஏன் தெரியுமா?

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் திருமணம் முடிந்த கையோடு புதுமணத் தம்பதி அரசுப் பள்ளிக்குச் சென்று மாணவர்கள் படிப்புக்காக செய்துள்ள உதவிக்கு பாராட்டுகள் குவிந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காட்டுநாவல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு. இவர் சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும் கண்ணகி என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் வெளிநாட்டிலிருந்து பிரபு ஊருக்கு வந்தார்.

இதையடுத்து அவருக்கு கண்ணகியுடன் திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்ததும் முதலில் வீட்டுக்கு செல்லாத பிரபு தனது மனைவியை அழைத்து கொண்டு தான் படித்த ஊராட்சி நடுநிலைப்பளிக்கு சென்றார்.

தொடர்ந்து, மாணவர்களின் படிப்புக்காக, வெண்பலகை ஒன்றை ஆசிரியர்களிடம் அன்பளிப்பாக மணமக்கள் இருவரும் கொடுத்தனர்.

இதோடு மரக்கன்றுகளையும் அவர்கள் நட்ட நிலையில் ஆசிரியர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.

பிரபு கூறுகையில், நான் சிங்கப்பூரில் இருக்கும் போது, என் சகோதரர் பள்ளிக்கூடத்துக்கு ஒரு வெண்திரை பலகை தேவைப்படுவதாக என்னிடம் கூறினார்.

அதன்படி திருமணம் நடக்கும் நாளில் அதை நானே நேரில் கொடுக்க வேண்டும் என நினைத்தேன், அது நிறைவேறியது மகிழ்ச்சியளிக்கிறது.

இதே போல என்னால் முடிந்த உதவிகளை நான் படித்த பள்ளிக்கூடத்துக்கு செய்வேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்