உயிரோடு ஜீவசமாதி அடைய போவதாக கூறிய சாமியாரின் குட்டு அம்பலம்! அடுத்தடுத்து வெளியான தகவல்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் நள்ளிரவில் உயிரோடு ஜீவசமாதி அடைய போவதாக பரபரப்பை ஏற்படுத்திய சாமியார் தொடர்ந்து தியானத்தில் இருக்கும் நிலையில் அவர் மகன் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் பாசாங்கரை என்ற கிராமத்தில் சில நாட்களாக பரபரப்பு நிலவி வருகிறது. இதற்கு காரணம் இருளப்பன் (80) என்ற சாமியார் தான்.

இவர் சமீபத்தில் உயிரோடு நள்ளிரவு 12 மணிமுதல் காலை 5 மணிக்குள் ஜீவசமாதி அடைய போவதாக அறிவித்தார்.

இதற்காக ஒரு மாதமாக உணவு சாப்பிடாமல் தண்ணீர் மட்டும் குடித்து வந்ததாக கூறப்பட்டது.

Image result for இருளப்பசாமி

இதனையைடுத்து அன்று இரவு பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

நேரம் முடிந்து விட்டதால், இன்னொரு நாளில் ஜீவசமாதி அடைவதாக இருளப்பன் கூறி சென்றார். இதனால் அங்கு வந்திருந்த அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதற்கிடையே சாமியார், பக்தர்களிடம் பண வசூல் வேட்டை நடத்தவே, ஜீவசமாதி நாடகம் ஆடியதாக மோசடி புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக, இருளப்பன் அவரது மகன் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்த பொலிசார் பணப்பை மற்றும் வசூலுக்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலை கைப்பற்றினர்.

Image result for இருளப்பசாமி

கண்ணை மூடிக்கொண்டு, மரத்தடியில் தியானம் செய்து வரும் சாமியார் இருளப்பனை மட்டும் விட்டு விட்டு, அவர் மகன் கண்ணாயிரம் உள்ளிட்ட மூவரை கைது செய்தனர்.

மேலும் 6 பேரை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

இதனிடையில் கண்ணை திறந்து, தியானத்தை நிறைவு செய்தால் மட்டுமே, இருளப்பனின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வரும் என தெரியவந்துள்ளது.

Related image

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்