வெளிநாட்டு வேலைக்கு போகுமாறு கணவனை தொந்தரவு செய்து வந்த மனைவி... பின்னர் நடந்த விபரீதம்

Report Print Raju Raju in இந்தியா

வெளிநாட்டுக்கு வேலைக்கு போக மறுத்து கணவன் விவசாயம் செய்ததால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் சுந்தர்ராஜபுரத்தைச் சேர்ந்தவர் பெரிய மாடசாமி. இவர் மனைவி ஸ்டெல்லா மேரி.

கட்டிட பொறியாளரான மாடசாமி அது தொடர்பான வேலைக்கு செல்ல விருப்பம் இல்லாததாலும் சொந்த விவசாய நிலம் இருந்ததாலும் விவசாயம் செய்து வந்துள்ளார்.

ஆனால் கணவர் விவசாயம் செய்வதை ஸ்டெல்லா விரும்பவில்லை.

இதையடுத்து மாடசாமியை அரசு வேலைக்கு அல்லது வெளிநாட்டு வேலைக்கு செல்லுமாறு ஸ்டெல்லா தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்.

இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தியில் இருந்த ஸ்டெல்லா, கணவர் வெளியில் சென்ற நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்