பள்ளி வளாகத்தில் மாணவர்கள் முன் பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்ட ஆசிரியருக்கு நேர்ந்த கதி

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் பள்ளி வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அடுத்த எஸ்.உடுப்பத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 4 வருடங்களாக புதன் சந்தை பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் வேலை செய்து வருகிறார்.

இவருக்கும், அதே பள்ளியில் அங்கன்வாடி மைய பொறுப்பாளராக இருக்கும், ஜெயந்தி என்பவருக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது.

கடந்த சில மாதங்களாகவே இவர்கள் இருவரும், பள்ளி வளாகத்தில் இருக்கும் கழிவறையில் நெருக்கமாக இருந்துள்ளனர்.

இதை பள்ளி மாணவர்கள் பார்த்ததால், அவர்கள் இது கூறித்து தங்கள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அவர்கள் இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்ததால், இருவரையும் தலைமை ஆசிரியர் எச்சரித்து அனுப்பியுள்ளார்.

இருப்பினும், அவர்கள் அதை எல்லாம் காதில் வாங்கி கொள்ளாமல், மீண்டும் பள்ளி வளாகத்திலேயே நெருக்கமாக இருக்க முயன்றுள்ளனர்.

இதை அறிந்த ஊர் பொதுமக்கள் பள்ளி வளாகத்தின் உள்ளே சென்று அவருக்கு தர்ம அடி கொடுத்தனர், அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது.

இதனால் பொலிசார் ஆசிரியரை தாக்கி விவகாரம் தொடர்பாக கிராமமக்கள் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பட்டியலின வன்கொடுமை சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் பள்ளியில் தகாத உறவில் ஈடுபட்ட ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்