சுபஸ்ரீயின் மரணத்திற்கு காரணமானவர் மீது மேலும் ஓரு வழக்கு பதிவு!

Report Print Kabilan in இந்தியா

சென்னையில் பதாகை விழுந்த விபத்தில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பலியான விவகாரத்தில், முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது மேலும் ஒரு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் சுபஸ்ரீ என்ற இளம்பெண், பதாகை விழுந்த விபத்தில் பலியான சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக லொறி ஓட்டுநர் மனோஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். அத்துடன் பதாகையை அடித்துக்கொடுத்த அச்சகத்திற்கும் சீல் வைக்கப்பட்டது.

பின்னர், விபத்தை ஏற்படுத்திய பதாகையை வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், அவர் மீது மேலும் ஒரு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. மரணம் விளைவிக்கும் குற்றத்தை செய்ய முயற்சித்தல் என்ற வகையில், 308 பிரிவின் கீழ் ஜெயகோபால் மீது பரங்கிமலை பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers