அவளுக்கு யாருமில்லை என நினைத்து இந்த திட்டத்தை போட்டேன்.. புதருக்குள் மறைத்து... அதிரவைத்த வாக்குமூலம்

Report Print Raju Raju in இந்தியா

சென்னையை சேர்ந்த பெண் பெங்களூரில் எரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி (60). இவர் கடந்த 4ஆம் திகதி மயிலாப்பூரில் உள்ள தனது வழக்கறிஞரை காண சென்ற நிலையில் பின்னர் மாயமானார்.

இது குறித்து விஜயலட்சுமியின் அண்ணன் சுகுமாரன் (63) பொலிசில் புகாரளித்தார்.

புகாரின் பேரில் பொலிசார் விஜயலட்சுமியின் செல்போன் எண்ணை ஆய்வு செய்த போது அவர் கடைசியாக பெங்களூருவை சேர்ந்த நிலத்தரகர் பாஸ்கர் (33) என்பவருடன் பேசியது தெரியவந்தது.

இதையடுத்து பெங்களூர் விரைந்த பொலிசார் பாஸ்கரை பிடித்து சென்னைக்கு அழைத்து வந்த விசாரித்தனர்.

விசாரணையில் பாஸ்கர் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், விஜயலட்சுமிக்கு பெங்களூரில் சொந்த வீடு உள்ள நிலையில் அதை விற்க அவர் பெங்களூரு அடிக்கடி வரும் போது என்னுடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த வீட்டை விற்பது தொடர்பாக விஜயலட்சுமிக்கு தெரியாமல் சிலரிடம் பணம் வாங்கினேன், இதையடுத்து பணம் தந்தவர்கள் வீட்டை வாங்கித்தர கட்டாயப்படுத்தினர்.

இந்நிலையில் கடந்த 4ஆம் திகதி சென்னைக்கு காரில் வந்து விஜயலட்சுமியிடம், பெங்களூரு இடத்திற்கு ரூ.1 கோடியே 20 லட்சத்திற்கு வாங்க ஆள் வந்துள்ளதாக கூறி பெங்களூரு அழைத்துக்கொண்டு சென்றேன்.

அப்போது செல்லும் வழியில் குளிர்பானத்தில் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை கலந்து கொடுத்தேன்.

இதை குடித்த விஜயலட்சுமி காரில் மயங்கி கிடந்தார். பெங்களூரு சென்றதும் அவரை எழுப்பியும், எழுந்திருக்காததால் இறந்துவிட்டதாக நினைத்தேன்.

விஜயலட்சுமிக்கு உறவினர்கள் என்று யாரும் இல்லை என நினைத்து, யாருக்கும் அடையாளம் தெரியாமல் எரித்துவிட்டால், வீட்டை நாம் எடுத்து விற்றுவிடலாம் என்று திட்டம் போட்டேன்.

பின்னர் புதர் அதிகமாக இருந்த இடத்தில், விஜயலட்சுமியை மறைத்து வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றேன்.

என்னை பொலிசார் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால் என்னை எப்படியோ கண்டுபிடித்து விட்டனர் என கூறியுள்ளார்.

இதையடுத்து பாஸ்கரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்