மனைவியுடன் வீடியோ கால் பேசியதால் லட்சக்கணக்கில் பணத்தை பறிகொடுத்த கணவன்! பின்னர் நடந்தது என்ன?

Report Print Raju Raju in இந்தியா

மனைவியுடன் வீடியோ கால் பேசியபடி லட்சக்கணக்கான பணத்தை கணவன் தவறவிட்ட நிலையில், இளைஞர்கள் சிலர் பணத்தை மீட்டு ஒப்படைத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மங்களூரை சேர்ந்தவர் தயானந்தன். இவர் நெய்வேலியில் பணிபுரிந்து வரும் நிலையில் தனது ஊருக்கு ரூ 2,50,000 துடன் ரயிலில் இரவில் பயணித்தார்.

ரயிலில் திருச்சிக்கு வந்த போது கீழே இறங்கிய அவர் மனைவியுடன் வீடியோ காலில் பேசினார். அப்போது அவர் பயணித்த ரயில் திடீரன கிளம்பி சென்றதால் தயானந்தன் பதற்றமடைந்தார்.

உடனே வாடகை காரில் கரூருக்கு சென்ற போது வழியில் மனைவியிடம் பணத்தை ரயிலில் வைத்ததை கூறினார்.

இதையடுத்து மனைவி தனக்கு தெரிந்த ரயில்வே பொலிசுக்கு தகவல் கொடுத்தார்.

இந்த சூழலில் தயாநந்தன் பயணித்த காரின் ஓட்டுனர் மதிவாணன் இது குறித்து தமிழ்நாடு இளைஞர் கட்சியின் நகர செயலாளர் கடம்பை பிரபுவுக்கு தகவல் கொடுத்தார்.

பிரபுவும் அவர் நண்பர் கணேஷும் கரூர் ரயில் நிலையத்துக்கு சென்று தயாநந்தன் பயணித்த ரயிலில் ஏறி அங்கு பத்திரமாக இருந்த பணத்தை மீட்டனர்.

பின்னர் ரயில்வே பொலிசார் உதவியுடன் பணம் தயாந்தந்திடம் ஒப்படைக்கப்பட்டது. தயானந்தனுக்கு, பணம் பத்திரமாக கிடைத்தது பெரும் மகிழ்வைத் கொடுத்துள்ளது.

இதற்காக மெனக்கெட்ட மதிவாணன், கடம்பை பிரபு, முகமது அலி, லோகேஷ், கார்த்திக், கரூர் ரயிவே பொலிசார் என அனைவருக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்