மூன்று சகோதரிகளின் ஆடைகள் களையப்பட்டு நிர்வாணமாக நடந்த கொடூரம்... இரத்தம் வந்ததால் கர்ப்பிணிக்கு நேர்ந்த கதி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் 3 சகோதரிகள் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஆடைகளைக் களைந்து நிர்வாண நிலையில் அவர்களுக்கு நடந்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாமில் வேறு சாதிப் பெண்ணை, பாதிக்கப்பட்ட 3 பெண்களின் சகோதரர் காதலித்து திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது.

பெண்ணைக் கடத்தியதாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கடந்த 9-ம் திகதி விசாரணைக்காக 3 சகோதரிகளையும், அவர்களில் மூத்த பெண்ணின் கணவரையும் விசாரணைக்காக தர்ராங் மாவட்டத்தில் புர்ஹா காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணையின் போது 3 சகோதரிகள் உள்பட 4 பேரின் ஆடைகளையும் களைந்து கடுமையாகத் தாக்கி கொடுமைப்படுத்தியதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

இது குறித்து பேசிய பாதிக்கப்பட்ட பெண்ணில் ஒருவர், காவலர்கள் எங்களை துப்பாக்கியை காட்டி மிரட்டி அழைத்து சென்றனர்.

பின்னர் அங்கு எங்கள் ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி லத்தியால் அடித்தனர். இதோடு பூட்ஸ் கால்களாலும் மிதித்தனர்.

என் மூத்த சகோதரி கர்ப்பமாக இருந்த நிலையில் அவள் வயிற்றில் எட்டி உதைக்க ரத்தம் வடிந்ததால் அவள் கீழே விழுந்துவிட்டாள் என கண்ணீரோடு கூறியுள்ளார்.

இதில் கர்ப்பிணியாக இருந்த பெண்ணுக்கு கரு கலைந்துவிட்டதாகவும் அவர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரில் மூவரும் கூறியுள்ளனர்.

இதுகுறித்து விசாரணை நடந்த நிலையில், ஒரு பெண் காவலர் உள்பட 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையில், அந்த பெண் கர்ப்பிணியாக இருந்தது உண்மைதானா என்பதை உறுதி செய்ய மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்