வீட்டில் மனைவி இல்லாத நேரத்தில் கணவன் செய்த செயல்... உள்ளே நுழைந்தவர்கள் கண்ட அதிர்ச்சி காட்சி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் படுத்த படுக்கையாக இருந்த நபர் தனது மர்ம உறுப்பை அறுத்து கொண்டு தற்கொலை செய்த நிலையில் அவர் மனைவி கதறியுள்ளார்.

சென்னை எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் ராம். கூலித் தொழிலாளியான இவரின் மனைவி கல்யாணி. தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

2015-ம் ஆண்டு மரம் ஏறியபோது ராம் கீழே விழுந்ததில் அவரின் முதுகுத்தண்டு பாதிப்படைந்தது. அதன்பிறகு ராம், படுத்தபடுக்கையாகி வீட்டிலேயே இருந்தார்.

இதனால் கல்யாணி வேலைக்குச் சென்று குடும்பத்தை காப்பாற்றிவந்தார்.

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தன்னுடைய ஆண் உறுப்பை பிளேடால் அறுத்திருக்கிறார் ராம்.

அவரின் அலறல் சத்தம் கேட்டு அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கு வந்தனர். அப்போது அவர்கள் கண்ட காட்சி அனைவரையும் நிலைகுலைய வைத்தது.

இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராம் அங்கு உயிரிழந்தார்.

இது குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து ராமின் மனைவி கல்யாணியிடம் விசாரித்தனர். அப்போது அவர், கடந்த சில தினங்களாக ராம் மனவேதனையில் இருந்தார். அவரின் வேதனையை என்னால் பார்க்க முடியவில்லை.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இப்படி செய்துவிட்டார் என்று கண்ணீர்மல்க கூறியுள்ளார்.

பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்