பதாகை வைக்க ரூ. 1000 லஞ்சம்... சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் வெளியான சர்ச்சை ஆடியோ

Report Print Vijay Amburore in இந்தியா

விதியை மீறி வைக்கப்பட்டிருந்த பதாகை விழுந்து சுபஸ்ரீ என்கிற மாணவி பரிதாபமாக உயிரிழந்த விவகாரத்தில் லஞ்சம் வாங்கியதாக ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த சுபஸ்ரீ என்கிற பொறியியல் மாணவி கடந்த சில தினங்களுக்கு முன் இருசக்கரவ வாகனத்தில் வீட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

அப்போது விதியை மீறி சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த அதிகமுக பிரமுகரின் பதாகையானது தவறி சுபஸ்ரீ மீது விழுந்தது. இதில் நிலைகுலைந்த சுபஸ்ரீ மீது தண்ணீர் லொறி ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.


இந்த சம்பவமானது தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தையும், அதிகாரிகளின் அலட்சியப்போக்கிற்கு எதிராக கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சுபஸ்ரீ வழக்கை விசாரிக்கும் பள்ளிக்கரணை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் ஒருவரும் போனில் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்