கடற்கரையில் சிதைந்த நிலையில் 3 மாத சிசுவின் சடலம்.... வீடு வீடாக பொலிசார் விசாரணை: வெளியான முழு பின்னணி

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரை ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 3 மாத சிசு தொடர்பில் பொலிசார் வீடு வீடாக சென்று விசாரணை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் பொழிக்கரை கடற்கரை சாலையில் நேற்று பகல் சுமார் 3 மாதமே ஆன ஒரு சிசுவின் சடலம் அழுகி காய்ந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தகவல் அறிந்து வந்த பொலிசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகாமையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விவகரரம் தொடர்பில் தாமாக முன்வந்து கிராம நிர்வாக அலுவலர் கீதா புகார் அளித்ததை அடுத்து ஈத்தாமொழி பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிசுவின் சடலம் உருக்குலைந்து இருந்ததால் அது ஆணா? பெண்ணா? என்பதை அடையாளம் காண்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மட்டுமின்றி நாய் கடித்ததில் குழந்தையின் கை மற்றும் உறுப்புகளும் இல்லை என தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்ட பொழிக்கரை, பெரியகாடு, ராஜாக்கமங்கலம்துறை ஆகிய கிராமங்களில் வீடு வீடாக சென்று பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

நீண்ட நேர விசாரணைக்கு பிறகும் குழந்தைக்கு யாரும் சொந்தம் கொண்டாடவோ அல்லது தெரியும் என்றோ கூறவில்லை என கூறப்படுகிரது.

இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பில் வேறு பகுதியில் யாராவது குழந்தையை கடலில் வீசி இருக்கலாம் என்றும்,

கடல் அலையில் இழுக்கப்பட்டு இங்கு வந்திருக்கலாம் என்றும் பொலிசார் கருதுகின்றனர்.

மேலும் பிரேத பரிசோதனை இன்னும் 2 நாட்களுக்கு பிறகே நடக்க உள்ளதாகவும், அதன் பிறகே இந்த விவகாரம் தொடர்பில் ஒரு முடிவுக்கு வர முடியும் என்று பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்